HOME GURUJI  SPEECH யார் பிரம்மச்சாரி தியானத்தின் முதற்படி கீதை   தத்துவம் இறை வணக்கம் 26 நற்குணங்கள்  
 

இறந்த காலம், நிகழ்காலம், எதிற்காலம் மூன்றையும் உயர்ந்த காலமாக்குதல்:

நமது சொல்லிலும் செயலிலும் நாணயம் பிறக்கிறது.

நமது தவறாத வாக்கும், நம்பிக்கையும்தான் நாணயத்தை வளர்க்கிறது.

நாம் இறை நினைப்போடு செய்யும் உழைப்பும் விடாமுயற்சியும் வாழ்க்கையை உயர்த்துகிறது.

நம்முடன் இவைகள் இருந்தால் மூன்றுகாலமும் உயர்ந்த காலங்களே.

பொதுவாக நாம் கடந்து வந்த காலம் மீண்டும் கிடைக்காது. இனி வரும் கலம் உங்களுக்கு உயர்வானதாக இருக்க நிகழ்காலமாகிய இன்றைய பொழுதை பகவானை நினைத்துக் கொண்டே பணியாற்றும் நாளாக மாற்றிவிடுங்கள்.

உழைப்பும், இறை நினைப்பும், பொறுமையும் பிரார்த்தனையும் கொண்ட ஒவ்வோரு நாளும் உயர்ந்த நாளே.

இன்றைய நாளை உயர்ந்த நாளாக நாம் உருவாக்கிக் கொண்டால் இறந்த காலம் உயர்வானதாகத்தான் இருக்கும். இன்று என்பது தான் நேற்று என்ற வார்த்தையாக நாளை விடியும் போது மாறி விடுகிறது.

ஒவ்வோரு நாளையும் உயர்ந்த நிகழ்காலமாக ஆக்குபவருக்கு இறந்த காலமும் சிறந்த காலம்தான். கோபம், பதட்டம், கொழைத்தனம் இந்த மூன்று நிலையும் நம் மனதில் வந்து விட்டால் தோல்வியும் சேர்ந்தே வந்து விடும்.

இதனால் நம்மை நாம் அவ்வப்பொது புத்தி என்ற கேமரா கொண்டு படம் பிடித்து நம்மையே நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். பகவானை இடைவிடாது நினைக்கப் பழக வேண்டும். இந்த முறையைக் கையாண்டு வந்தால் எதிற்காலம் உயர்ந்த காலமாக இருக்கும்.

   

கதையும் கருத்தும்

'திருமுல்லை' என்ற நாட்டை 'வேத நெறி' என்ற அரசன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அவனது இறைபக்தியைக் கண்டு எல்லோரும் அவனிடம் அன்பும் மரியாதையும் காட்டுவர். தியானம் செய்யும் பழக்கத்தை இளமையிளேயே ஆரம்பித்து விட்டதால் எதையும் தெளிவாக உணர்ந்து செய்து வந்தான்.

அவ்வப்போது தனது குடிமக்கள் நலனுக்காக விரதமிருந்து பிரார்த்தனை செய்வான். பகவான் அருளால் எல்லா வளமும் நிறைந்திருந்தது. ஒரு நாள் கூட காலை 3 1/2 மணிக்கு மேல் தூங்கியதில்லை. அதிகாலையிலிருந்தே தனது தியானத்தை ஆரம்பித்து விடுவான்.

இவனது லட்சியம் இறைவனை அடைவது நாட்டு மக்கள் உயர்வுபெற நல்லாட்சி செய்வதுமேயாகும். இதனால் பள்ளிகள் தோறும் ஆன்மீகம் வளர்த்தான்.

ஒருநாள் அதிகாலைப்பொழுதில் தியனாத்திலிருந்தான். அந்த பொழுதில் யாரோ ஒரு பெண் தனுடக்கு குறுக்கே நடந்து செல்வதைப் பார்த்து 'யார் நீங்கள், இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்' என்று கேட்டான்.

'நான்தான் செல்வம் அதாவது தனலச்சுமி. எந்த இடத்திலும் நீண்டகாலம் தங்கக் கூடாது. ஆனால் உங்கள் நாட்டில் தங்கிவிட்டேன். இடம் மாற்ற வேண்டியதால் இப்பொழுது வேறு இடம் செல்கிறேன்' என்றாள்.

அரசன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு பதில் 'உங்கள் எண்ணப்படி தாங்கள் சென்றுவாருங்கள்' என்று வழியனுப்பி வைத்தான்.

அடுத்து சிறிது நேரத்தில் வேறொரு பெண் வந்தாள். அவள் 'நான்தான் கொடை தனலச்சுமி இல்லாத இடத்தில் எனக்கு வேலையில்லை வருகிறேன்' என்று கூறிச் சென்று விட்டால். அரசன் அவளை தடுத்து நிறுத்தவில்லை.

அடுத்து சிறிது நேரத்தில் வேறொரு பெண் வந்தாள். அவள் 'நான்தான் வீரலச்சுமி என்றாள். தனலச்சுமி, கொடை இல்லாத இடத்தில் எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை' என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்.

அரசன் அதற்கு ஒன்றும் பதில் பேசாது தொடர்ந்து மந்திரங்களை உச்சரித்தபடி மானசீகமாக அவன் உள்ளத்தில் எழுப்பியிருந்த கோயிலில் பூப் போட்டு அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்.

அடுத்து பகவானுக்கு மானசீகமாக தீப ஆரத்தி எடுத்து மனதால் மகிழ்ந்து கொண்டிருந்தான். கடைசியாக ஒருவர் செல்வதைக் கண்ணால் பார்த்தான். ஆனால் அவரைச் சுற்றி ஒளி வட்டம் இருந்தது.

அரசன், 'ஐயா நீங்கள் யார்?' என்று கேட்டான். அதற்கு அவர் 'நான்தான் சத்தியம்' என்று கூறினார். உடனே எழுந்து ஒடிப்போய் 'பகவானே, இறைவா என்னைவிட்டு நீங்கள் போகாதீர்கள்'. என்று கெட்டியாக உள்ளத்திலும் வேளியிலும் பற்றிக் கொண்டான்.

பகவான் அவன் வேண்டுதலை அன்புடன் ஏற்றுக் கொண்டார். அங்கே தங்கவிட்டார். சிறிது நேரத்தில் வெளியில் சென்ற தனலச்சுமி முதல் அனைவரும் அரசன் முன் வந்து நின்றார்கள்.

'ஏன் அம்மா சென்றவர்கள் திரும்ப வந்து விட்டீர்கள்'? என்று அரசன் கேட்டான்.

அதற்கு 'என்ன செய்வது சத்தியமாகிய பகவான் இருக்கும் இடத்தை விட்டு நாங்கள் போக முடியாதே. அதனால்தான் வந்து விட்டோம்' என்று கூறினார்கள்.

எது எப்படியோ பகவானை உள்ளத்தில் வைத்திருப்பவர்களுக்கு முக்காலமும் சிறந்த காலமே. துன்பம், இன்பம், வெற்றி எல்லாமே பகவான் நடத்தும் தனித்தனி பாடங்கள்தான். பகவானை கெட்டியாக பற்றியிருப்பவர்களுக்கு எல்லாமே வெற்றிதான்.